கண்ணகி கோவில் திருவிழா: அதிகாரத்தை கையில் எடுத்த இடுக்கி மாவட்ட ஆட்சியர் – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா தொடர்பாக, முடிவெடுக்க வேண்டியது தமிழக அரசுதானே தவிர, இடுக்கி மாவட்ட ஆட்சியர் அல்ல…

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்கிற மலையாள அரசின் தந்திரங்கள் பலத்த அடி வாங்கியதற்கு பின்னால்,

மெல்ல மெல்ல கண்ணகி கோவிலின் மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறது கேரள மாநில அரசு.

ஒரு முறைக்கு பலமுறை நாம் சொல்லியதுதான்…

மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்திருக்கும் வண்ணாத்திப் பாறை வனப்பகுதி, தமிழக அரசுக்கு சொந்தமான ரேஞ்ச் என்பதை மலையாளிகள் முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

மேலாக காலங்காலமாக தமிழர்களின் பண்பாட்டுத் தொட்டிலாக விளங்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்திருக்கும் பகுதியை, எந்த நிலையிலும், எந்தக் காரணத்தை கொண்டும், கேரளா கபளீகரம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்கிற நிலைப்பாட்டில், கோடிக்கணக்கான கண்ணகி பக்தர்கள் உறுதியாக இருக்கும் நிலையில்,,,

திடீரென முளைத்த ஒரு மலையாள அமைப்பு, சித்ரா பௌர்ணமி தினமான மே 5 ம் தேதியைத் தவிர்த்து,6 ம் தேதி தான் கண்ணகி கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு சம்பந்தமே இல்லாமல் அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.

அரைவேக்காட்டுத்தனமான இந்த முன்மொழிவை தேனி மாவட்ட மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்களுக்கு வழி மொழிந்திருக்கிறார் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அவர்கள்…

இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா…

சிலப்பதிகாரமே உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்று புலவர் கோவிந்தராசனார் அவர்களால் நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில்…

மங்கலதேவி கண்ணகிக்கு உகந்த நாளான சித்ரா பௌர்ணமியை தவிர்த்து விட்டு, மறுநாள் தான் அந்த திருவிழாவை நடத்த வேண்டும் என்று சொல்வதற்கு அரைவேக்காட்டு மலையாளிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது.

நேற்று வரை இரண்டு மாநிலங்களும் கொண்டாடி வாழ்ந்த சித்ரா பௌர்ணமி நாளை, இன்று நாம் தனித்து கொண்டாட இருக்கும் நிலையில், அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாட இருக்கும் நிலையில், எங்கிருந்து இந்த அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார் இடுக்கி மாவட்ட ஆட்சியர்…

இதில் சம்பந்தமே இல்லாமல் கேரளாக்காரன் இன்று கண்ணகி கோயிலில் உரிமை கொண்டாடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அறக்கட்டளை, இரண்டு மாவட்ட ஆட்சியர்களின் கூட்டுக் கூட்டத்தை தேக்கடியில் நடத்தக்கூடாது,கம்பத்தில் தான் நடத்த வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருப்பது நகைச்சுவையில் உச்சம்.

இந்த அறக்கட்டளை தான் கேரளாக்காரன் கோவிலை கட்ட வேண்டும் என்று எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் நிலுவையில் வைத்திருப்பவர்கள்.

இவர்கள் கொடுத்த தைரியத்தில் தான் இன்றைக்கு கேரளாவில் உள்ள சின்ன சின்ன அமைப்புகள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரியாதைக்குரிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நிகழ்வுக்கு வருகை தந்து, மங்கலதேவி கண்ணகியின் அருளைப் பெற வேண்டும் என்று இரு கரம் கூப்பி அழைக்கிறோம்.

கூடுதலாக மங்கலதேவி கண்ணகி கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்துவிட்டது என்கிற அறிவிப்பையும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

தனிப்பட்ட நபர்களுக்கோ, தனிப்பட்ட அறக்கட்டளைகளுக்கோ சித்ரா பௌர்ணமி நிகழ்வில் முக்கியத்துவம் இருக்குமானால், அதை எதிர்த்து கண்டிப்பாக களத்தில் நின்று போராடுவோம்.

இறுதியாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு…

பழனி மலை கோயிலுக்கு செல்வதற்காக அரசு அமைத்திருக்கும் ரோப் கார் வசதியை மங்கல தேவி கண்ணகி கோயிலிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல்
பளியங்குடி, தெல்லுகுடி வழியாக வனத்துறையின் ஒப்புதலோடு ஏற்கனவே திட்டமிடப்பட்ட சாலைப் பணிகளை, இப்போது தொடங்கினாலே மண் சாலையாக மாற்றி விடக் கூடிய அவகாசம் இருப்பதால், அதிலும் கவனம் செலுத்த வேண்டுமாய் கனிவுடன் வேண்டுகிறோம் என தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் அவர்கள் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!