இராஜபாளையம் சஞ்சீவிநாதபுரம் பகுதியில் மகாகணபதி கோவிலில் அயோத்தியில் உள்ள ராமர் உட்சவர் ரத யாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது .
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதி உள்ள மகாகணபதி திருக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சுப்பையா சண்முகம் , கணபதி ஆறுமுகம் .ஆகியேர் அயேத்தி உள்ள ராமர் கோவிலுக்கு புதிதாக உற்சவ மூர்த்திகள் ராமர் , லட்சுமனர், சீதா . அனுமன் சிலைகள் செய்து பக்தர்கள் சாமிதாசனத்திற்க்காக வைக்கப்பட்டது.
இதையாடுத்து ரத யாத்திரையாக கோவை மாவட்டத்தில் துடியலூர் சேலம் மாவட்டம் கொட்டவாடி உள்ளிட்ட பகுதிகளில் 10 நாள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளதாக உற்சவர் ரத யாத்திரை குழு தெரிவித்தது உற்சவர் வைக்கப்பட்டுள்ள
மகாகணபதி கோவிலில் மக்கள் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்தபோது:
தீபாவளி பண்டிகை மையமாகவைத்து பட்டாசு, அந்த காலத்தில் பட்டாசு வெடித்து வழிபாடு என்பது முக்கியமான நிகழ்வாக காணப்பட்டது. பட்டாசு இல்லாத தீபாவளி நினைத்துக்கூட பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகள் சுற்றுச்சூழல் மாசு படுவதாக பசுமை பட்டாசு தயாரிக்கும் வழிமுறைகளை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். பசுமை பட்டாசுகளை தயாரிக்கவேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தடைசெய்யப்பட்ட கெமிக்கல் பொருட்களை பட்டாசு தயாரிக்க பயன் படுத்துவதாக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பி இருக்காங்க. இது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சில மாநிலங்கள் தற்போது பட்டாசு தடை என அறிவித்துள்ளது. இந்து மக்கள் கட்சி விரும்புவது சீன பட்டாசுகள் தடை செய்ய வேண்டும். சிவகாசியில் தயாரிக்கும் பசுமை பட்டாசுகள் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும். தீபாவளி கொண்டாட்டம் சிவகாசி பட்டாசு தான் கொண்டாட வேண்டும் அதற்கான மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரையரங்கில் உரிமம் புதுப்பிக்க வில்லை என கூறி அனைத்து திரையரங்குகளும் மூட வைத்துள்ளார். ருத்ர தாண்டவம் படம் வெளியாகும் சூழ்நிலையில் இவ்வாறு செய்துள்ளார். நீண்ட காலம் படத்தினை திரையிடாமல் மறைத்து வைக்க முடியாது.
இந்த திரைப்படம் வெளிவந்தபின் கிறிஸ்தவர்கள் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்துவாக இருக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும், இரண்டையும் திணித்து அரசாங்கத்தை ஏமாற்றக்கூடாது. இது சட்டப்படி தவறு. அம்பேத்கர் கொள்கைகளுக்கு எதிரானது. கிரிப்ட்டோ கிறிஸ்துவர்கள் ஜாதி சங்கத்தை தடை செய்ய வேண்டும். இவர்கள் அரசு உத்தியோகத்தில் பணிபுரிபவர்களை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாக உள்ள மக்கள், பட்டியலின மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் அவர்களுக்கு அரசு சலுகைகள் அளிக்க வேண்டும் என அரசுக்கு கவனம் தெரிவிப்பதாகவும், கோரிக்கை வைப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.