
தீப நகரமாக ஜொலித்த திருப்பரங்குன்றம்… பலத்த பாதுகாப்புடன் மலை மேல் தீபத்தூணில் மகா தீபம்!
உச்ச நீதிமன்ற உத்தரவு: திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் மகா தீபம் ஏற்றப்பட்டது!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுசாமி திருக்கோயில் மலை உச்சியில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில் மகா தீபம் வெற்றிகரமாக ஏற்றப்பட்டது.









கோயில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு, நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நீதிபதிகள், சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் மலை உச்சிக்குச் சென்று நிகழ்வை மேற்பார்வையிட்டனர்.
நீண்ட நாட்களாக நிலவிய சட்டப் போராட்டங்கள் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்குப் பிறகு, சரியாக மாலை ஐந்து மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டபோது, கீழே குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ‘அரோகரா’ முழக்கங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். பக்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியதால், திருப்பரங்குன்றமே பக்தி வெள்ளத்தில் மிதந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.