
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திடீர் திருப்பம்! தீபத்தூணில் தீபம் ஏற்ற தடையில்லை… முதல் ஸ்தானிக பட்டரின் புதிய விளக்கத்தால் மீண்டும் பரபரப்பு!
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது இது ஆகம விதிப்படி பாரம்பரியமாக ஸ்தானிக பட்டர்கள் கருத்து தெரிவித்ததின்படி ஏற்றப்பட்டதாக அரக்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியதாக கோவில் நிர்வாகம் நிர்வாகம் கடிதம் ஒன்று வெளியிட்டது.
இந்த நிலையில் இந்த கருத்து நாங்கள் கூறவில்லை என அது தொடர்பாக கடிதம் எதுவும் வழங்கப்படவில்லை எங்களது பெயரை பயன்படுத்தியது மன வேதனை அளிக்கிறதாக தெரிவித்து ஸ்தானிக பட்டர்கள் விளக்கம் கடிதம் அனுப்பினர்.
இந்த நிலையில் முதல் ஸ்தானிக பட்டர் வீடியோவில் கூறியதாவது, தீபத்தூண் இருக்கும் பகுதிக்கு முறைப்படி படிக்கட்டுகள் செய்து தந்து, கைப்பிடி மின்விளக்குகள் வசதிகள் செய்து இருந்தால் கண்டிப்பாக தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்.
உச்சியில் ஏற்றக்கூடாது என சொல்லி இருக்கிறோமா? இடையில் வந்த ஆகம விதியின் படி தான் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படுவதாகவும், அதற்கு முன்பெல்லாம் ஏற்றியதே கிடையாது. என்ன தெரிவிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அறகாவலர் குழு தீர்மானத்தின் படி கோவில் அலுவலர்கள் கொடுத்த அறிக்கையின்படி ஸ்தானிக பட்டர் கருத்தின்படி உச்சி பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்டதாக அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில், இடையில் வந்த ஆகம விதியின் படி தான் இயற்றப்பட்டதாகவும் மலை உச்சியில் ஏற்றக்கூடாது என சொன்னோமா என முதல் ஸ்தானிக பட்டர் கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.