மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நிலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வில்
தேசிய அளவில் ஆன்லைனில் அறிவியல்திறன் பயிற்சியில் பங்குபெற்று தேர்வு பெற்றனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்திய தொலை உணர்தல் நிறுவனம் டோடூன் சார்பில் தொலை உணர்த்துதல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியல் புவியியல் தகவல் அமைப்பு பயன்பாடுகள் என்ற தலைப் பில் நிகழ்வுநிலை ஆன்லைன் பயிற்சி வகுப்பு கடந்த
26.7.21 முதல் 30.7..21 வரை நடைபெற்றது.
தேசிய அளவில் மாணவ-மாணவிகளிடையே நடைபெற்ற இப்போட்டியில் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில் உள்ள அரசுஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி வழிகாட் டுதலின்படி நிலையூர் அரசு உயர்நிலைப்பள் ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ்வரி, கே.சீலைக்காரி, வி.சிலைக்காரி, தசாந்தினி, லோகேஸ்வரன், அன்பரசி, சந்தோஷ் ஆகிய 7 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
இதனையொட்டி விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் 7 மாணவ- மாணவிகளையும் பாராட்டி விருதும், நற்சான்றிதழையும் வழங்கினர். இந்த நிலையில் மதுரை மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன் அறிவியல் திறன் க ஆன்லைன் பயிற்சியில் தேர்ச்சி பெற்று விரு தும் சான்றிதழும் பெற்ற 7 மாணவ, மாணவி களை பாராட்டினார். மேலும் அவர் தலை 5 மையாசிரியர் விநாயகமூர்த்தி, உதவி தலைமையாசிரியர் மகாலட்சுமி, அறிவியல் ஆசிரியைகள் உமா, கவிதா ஆகியோரையும் பாராட்டினார்.