விரும்பியோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதைக் கட்டாயமாக்கி 100% விழுக்காடு என இயற்கைக்கு மாறான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கட்டாயப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் போவதாக சுகாதாரத் துறையினர் அறிவித்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
கடந்த 29.11.2021 அன்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கபடவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த 01.12.2021 அன்று தில்லியில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா, “ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.
இந்திய ஒன்றிய நலவாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை” என்று கூறியுள்ளார்.
மேகாலயா உயர் நீதிமன்றம் Registrar General, High Court of Meghalaya v. State of Meghalaya வழக்கில் (PIL. 6/2021) கடந்த 23.06.2021 அன்று தீர்ப்பளித்து, தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல்எனக்கூறியுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கும், செலுத்திக் கொள்ளாதவருக்கும் இடையில் பாகுபாடு காட்டும் அரசாணைகளை கவுகாத்தி உயர் நீதிமன்றம் (வழக்கு எண். PIL 13/2021, தீர்ப்பு நாள் – 19.07.2021) நிறுத்தி வைத்து ஆணையிட்டுள்ளது.
மேலும் சமூக ஆர்வலர்கள் பலரும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மக்கள் – நல்வாழ்வுத்துறையினரிடம் கேட்ட போது கொரோனாதடுப்பூசி போடுவைதை கட்டாயப்படுத்தி எவ்வித ஆணையும் வெளியிடப்படவில்லை என பதில் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட கட்டாயமில்லை என்று நீதிமன்றங்கள் தெரிவிக்கிறது அவர்களிடத்தில் மத்திய,மாநில அரசு அதிகாரிகளும் கட்டாயப்படுத்தவில்லை என பதில் மனு தாக்கல் செய்கின்றனர், ஆனால் மக்களிடம் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது, பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது எனவும்,அரசு சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படும் எனவும் பொதுமக்களை மிரட்டி கட்டாய தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர்.
எனவே தடுப்பூசி கட்டாயம் இல்லை அவரவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தடுப்பூசி போடப்படும் என மத்திய,மாநில அரசுகள், துறை ரீதியான அதிகாரிகளுக்கும்,மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும்,இயற்கைவழி வாழ்வியலாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
================================
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.