1950ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது நாட்டில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மனித உரிமை அமைப்புகளும், இயக்கங்களும் சிறப்பாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன் மனித உரிமை என்ற பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும், அமைப்புகளும் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி மனித உரிமை என்ற சொல்லின் பயன்பாட்டை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உணர்ந்து மனித உரிமை மீதான தடையை நீக்க வேண்டும். தேவைப்பட்டால் துஷ்பிரயோகம் செய்யும் இயக்கத்தை தடை செய்யலாம் அல்லது தவறு செய்யும் தனிநபரை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, ஒட்டுமொத்த மனித உரிமைக்கும் தடை என்பது, மனித உரிமைகளுக்கு எதிரான செயல்பாடு என்கிற அடிப்படையில் இத்தடையை நீக்க வேண்டும்.

கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், பால், மொழி, ஜாதி, மதம், அரசியல், பிறப்பு, சொத்து என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும். மனித உரிமை மீறல் குறித்த புகார்களை அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைய வழி புகார் தெரிவிக்கும் முறை இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆணையத்தின் உடனடி சேவையைப் பெறுவதற்கு 14433 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
அதேவேளையில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மனித உரிமை இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் இயங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டில் மட்டும் மனித உரிமை இயங்கங்கள் செயல்பட அனுமதி அளிக்காதது ஏன்..? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றையதினம் அகில இந்திய மனிதவள கழகம் சார்பாக சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சர்வதேசங்களில்

வாழும் மக்கள் தங்கள் உரிமையுடன் வாழவும் எந்தவிதமான பாகுபாடின்றியும் அவர் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க வேண்டும்
என அகில இந்திய மனித வள கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அகில இந்திய தலைவர் டாக்டர் ஏ.கே முத்துக்குமார் அகில இந்திய அவைத்தலைவர் விருகை பி.சத்திய நாராயணன்,
அகில இந்திய பொதுச்செயலாளர் டாக்டர் சேலம் சுரேஷ்குமார் ஜான் பீட்டர் அகில இந்திய பொருளாளர் டாக்டர் ஆகாஷ் முத்துராமன் மாநிலத் தலைவர் டாக்டர் பிரதீப் குமார்,மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயக்குமார் ஆகியோர் மனித உரிமை தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

.
இது போன்ற செய்திகளைஉடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.