திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் க.ஆனந்த் தலைமையில் செந்துறை சமத்துவபுரம் அருகில் உள்ள பழங்குடியினருக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர்.மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிளை கழகத்தின் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு அளிக்கப்பட்டு,இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் ஒன்றிய பொருளாளர் கருணாநிதி, கிளைக்கழக செயலாளர்கள் ராஜா கண்ணன், அய்யங்காளை, அய்யனார் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி சார்பாக அழகுராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்தின்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக கட்சியின் நட்சத்திர நாயகன் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பழனி நகர திமுக இளைஞரணி சார்பில் பழனி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவை போற்றும் வகையிலும் பாரம்பரிய மருத்துவ முறையை நினைவு கூறும் வகையிலும் திமுக இளைஞரணி சார்பாக மருத்துவ மூலிகை செடிகளை நடவு செய்யும் விழா நடைபெற்றன. இவ்விழாவில் திமுக இளைஞரணி பொறுப்பாளர்கள் சித்தமருத்துவ தலைமை மருத்துவர் மகேந்திரனிடம் மூலிகை செடிகளை வழங்கினர்.மேலும் மருத்துவமனையில் உள்ள மூலிகை தோட்டத்தில் மூலிகைச் செடிகளை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நட்டு வைத்தனர்..சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர திமுக சார்பில் மாவட்ட துணைசெயலாளர் ஜோன்ஸ் ரூசோ தலைமையில் நகரச் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தியாகிகள் பூங்கா அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை நகர திமுக இளைஞரணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் தலைமை வகித்தார். திமுக மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாநிதி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ஹரி, ஞானவேல், நிக்கேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் கழகக் கொடியை ஏற்றி வைத்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை அக்கட்சி தொண்டர்கள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.தஞ்சாவூர் மாவட்டம் கரம்பயம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இதில் கரம்பயம் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணன் ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர் அண்ணன் உதயநிதி அவர்களும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர திமுக இளைஞர் அணி சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஐ.இ.எல்.சி செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு உடன் கொண்டாடினர் இதில் மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நாகை தெற்கு மாவட்ட திமுக மாணவரனி சார்பில் நாகை தெற்கு ஒன்றியம் வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் அருள்மிகு கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நாகை வடக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக, மயிலாடுதுறை ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆடவர் மற்றும் மகளிர்க்கான மாபெரும் கைபந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.இன்று பல்லவபுரம் கண்டோன்மெண்ட் 5வது வார்ட்டில் இளம்தலைவர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினர்..நிகழ்ச்சி ஏற்பாடு அன்பு அண்ணன் N.V.விஜயசங்கர்- 5வது வார்ட் கழக செயலாளர் பல்லாவரம் கண்டோன்மெண்ட், A.வினோத்குமார் – 5வது வார்ட் இளைஞரணி அமைப்பாளர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.