மதுரை திருப்பரங்குன்றம் அருகே டூவீலரில் படமெடுத்து ஆடிய பாம்பு மீட்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் 7வது பேருந்து நிறுத்தத்தில் உள்ள பாலசுப்பிரமணியம் நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலைரை வெளியே செல்வதற்காக ஸ்டார்ட் செய்த போது பாம்பு ஒன்று டூவீலரில் பதுங்கி இருப்பதை அறிந்து, திருநகர் பக்கம் ஊர்வனம் அமைப்பைச் சேர்ந்த ஸ்நேக் சகா என்ற சகாதேவன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த ஸ்நேக் சகா பாம்பை தேடினார் அப்போது, டூவீலரின் ஹேண்டில் பாரில் இருந்து வெளியே வந்த நல்லபாம்பு படமெடுத்து ஆடிய 3 அடி நீளமுள்ள பாம்பு மீட்கப்பட்டு, வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.