ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை மதுரை தோப்பூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், தோப்பூர் கிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சாமியப்பன், கோபிநாத், பிச்சை பாண்டி, ஆஸ்டின்பட்டி காவல் நிலைய காவலர்கள் உட்பட தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துதுறை அமைச்சர் ப. மூர்த்தி திறந்து வைத்தார்.

இதற்கு முன்னர், இந்தக் காவல்நிலையம் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனை அருகே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுதுபுதிய கட்டிடம் தோப்பூர் ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே கட்டி திறக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.