ரேஷன் கடைக்கு செல்லாமல் பொருட்கள் வாங்குவது எப்படி?

ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாத சிலர் தங்களுக்கு தெரிந்தவர்களை அனுப்பி பொருட்கள் வாங்கி கொள்ள முடியும். அதற்கு அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும். அது எப்டி என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் 34,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிய ரேஷன் கோரி பல விண்ணப்பங்கள் குவிந்து வருவதால் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பரீசிலித்து வருகிறது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப தலைவர்கள் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து ரேஷன் கார்டு தொடர்புடைய சேவைகளும் இந்த தளத்தில் மேற்கொள்ள முடியும்.

இதனிடையே ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலையில் சிலர் உள்ளனர். அவர்களில் குறிப்பாக வயதானாவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நேரில் ரேஷன் கடைகளுக்கு செல்லாமல் பொருட்கள் வாங்க முடியும். இதற்கான விண்ணப்பத்தை நீங்கள் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகள் அல்லது ஆன்லைனில் பெற முடியும். ஆன்லைனில் tnpds.com என்ற இணையத்தில் சென்று இந்த விண்ணப்பத்தை பெற முடியும்.

TNPDS இணையதளத்தில் கீழ்பகுதியில் அங்கீகாரச்சான்று என்ற ஆப்ஷேன் இருக்கும். அந்த விண்ணபத்தில் குடும்ப தலைவரின் பெயர் மற்றும் அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு எதனால் நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாது என்ற காரணத்தையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக வயது முதிர்வு, மாற்றுத்திறனாளி, விபத்து, மருத்துவமனையில் சிகிச்சை போன்ற காரணங்களை தெரிவித்து அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

அதேப்போன்று உங்களுக்காக யார் சென்று பொருட்கள் வாங்க உள்ளார்கள், அவர் பெயர், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி உங்கள் ரேஷன் கடைக்கான தாலுகா அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தை கொடுத்தால் அவர்கள் அதனை சரிபார்த்து உங்களுக்கு அனுமதி வழங்கி சான்றிதழ் வழங்குவார்கள். இதை வைத்து கொண்டு நீங்கள் ரேஷன் கடைக்கு நேரில் போகமல் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!