விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. சட்டமன்ற உறுப்பினர் தங்கபண்டியன் முயற்சியின் கீழ் 2வது வார்டு மங்கம்மாள் சாலை மெயின் ரோடு,5வது வார்டு மகாத்மா நர்சரி ஆங்கிலப்பள்ளி, 10வது வார்டு முனியாண்டி கோவில் தெரு என மூன்று இடங்களில் தலா 2 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 6 லட்சம் ரூபாய் செலவில் தாமிரபரணி கூட்டுக்குடி நீருக்கான நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு.

இந்த பகுதி மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தாமிரபரணி தண்ணீரை இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அதை இன்று மக்கள் பயட்டிற்க்கு சட்டமன்ற மன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் ஒப்பந்ததாரர் பொன்னுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.