ஒரு மோசடி கும்பல், கார் உரிமையாளரை புதிய யுக்தியை பயன்படுத்தி, அவரை திசை திருப்பி ஏமாற்றி காரின் கதவை திறந்து நூதனமா திருடும் வீடியோவை ஈரோடு மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில், காரின் முன் சக்கரம் பஞ்சர் என இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சொல்வதும், அதை அவர் பரிசோதிக்கும் போது ஒரு பெண் வந்து முகவரி கேட்பதும். அப்போது காரின் பின்புறம் இருந்து வரும் ஒருவர் அவரது காரின் கதவை திறந்து அதற்குள்ளிருக்கும் பொருளை திருடுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது.
இதில், ஓரிடத்தில் கூட ஏமாற்றப்பட்டவருக்கு நாம் எங்கே, எப்போது ஏமாற்றப்பட்டோம் என்பதை யூகிக்கமுடியாது. அந்த அளவுக்கு திட்டமிட்டு ஒரு மோசடிக் கும்பல் செயல்படுகிறது.
ஆகையால், கார் ஓட்டிகள், இதுபோன்று பஞ்சர் என்று சொன்னதும், வேகத்தை குறைத்து காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும் கார் கதவை மூடி லாக் செய்து விட்டு இறங்கி பார்க்கவும் அல்லது சிறிது தள்ளிச் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு டயர்களை பரிசோதிப்பது நல்லது என்பதையே இந்த வீடியோ மூலம் நாம் அறிவதாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.