திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர் ஸ்டாலின்.. திகைத்துப் போன போலீஸ்கார்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சர்ப்பைரஸ் விசிட் ஆக தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள காவலர்கள் இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆச்சர்யம் அளித்தார். இதை பார்த்து காவலர்கள் திகைத்து போனார்கள்.

புகார்கள் மீது உடனே ஆக்‌ஷன் எடுக்குறீங்களா? இரவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்!
முதல்வர் ஸ்டாலின் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு செய்ததுடன், வழக்குகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். காவல்துறை என்பது உள்துறையின் கீழ் வரும் துறையாகும். முற்றிலும் முதல்வரின் கட்டுப்பாட்டில் வரும் துறை என்பதால் துறை ரீதியாக இந்த ஆய்வு நடந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளார். காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் திட்டம், முதல்வராக ஸ்டாலின் ஆன பின்னரே நடைமுறைக்கு வந்துள்ளது.

வரவேற்பாளர்கள்:


காவல்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பார்கள் நியமிக்கப்படுவார்கள் இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் பாதிப்புகள் ஆயிரத்து 1132 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

உயர்மட்டக்குழு:


இரண்டாம் நிலை காவலரிலிருந்து முதல்நிலை காவலராகவும் முதல்நிலைக் காவலரிலிருந்து தலைமை காவலரிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு உயர்வுக்கான கால வரம்பை ஆய்வு செய்ய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!