தமிழ்நாடு அரசுக்கு வள்ளலார் பணியகம் கோரிக்கை!
வள்ளலார் பணியகத்தின் தஞ்சை நகரச் செயற்குழு கூட்டம் நேற்று (27.09.21) தஞ்சையில் நடைபெற்றது. இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன், கலைப் பண்பாட்டு மேனாள் பொறுப்பாளர் முத்து, திருவாளர்கள் இரவிச்சந்திரன், மணிச்சந்திரன், உறுதிமொழி கோவிந்தராசன், கறம்பக்குடி முத்தையா, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் இறைநெறி இமையவன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், அருட்பாதாசன், கீரனூர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
வள்ளலார் வரலாறை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், வள்ளலார் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும், கோவில்களில் தமிழ்மொழி அர்ச்சனை என்பதை தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாணவி பாரதி, திரு கிட்டப்பா ஆகியோர் வள்ளலார் பாடல்களை சிறப்பாகப் பாடினர்.
================================
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.