பெரும் சோகம்; விபத்தை விசாரிக்க சென்ற தலைமைக் காவலர் சாலை விபத்தில் மரணம்

விமான நிலையம் அருகே விபத்து குறித்து விசாரிக்க சென்ற போது தலைமைக் காவலர் விபத்தில் மரணம

மதுரை பெருங்குடி ரிங் ரோடு அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜசேகரன் (42) திடீர்நகர் (1) போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலரான இவர் மேற்கண்ட விபத்து குறித்து விசாரிக்க சென்று கொண்டிருந்தபோது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் சந்திப்பில் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் காவல்துறையினர் மட்டும் இல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!