மதுரையில் பெய்த கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டு இடிந்து விழுந்தது

மழையால் இடிந்து விழுந்த பழைய படிக்கட்டு கட்டிடம் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குடியிருப்புவாசிகள்

மதுரை எஸ்.எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் 2வது பால் டிப்போ எல்லிஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனி ஷோபனா என்னும் அடுக்குமாடி குடியிருப்பு இருந்து உள்ளது.

இதில் ஆறு குடும்பங்கள் வசித்து வருகிறது இந்த நிலையில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக இரண்டாவது மாடியில் படிக்கட்டுகள் திடீரென இடிந்து விழுந்தது சுதாரித்துக்கொண்ட குடியிருப்புவாசிகள் உடனே வீட்டை விட்டு வெளியேறினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிப்புகள் ஏதும் உள்ளதா..? இல்லை யாரேனும் சிக்கி உள்ளார்களா..? என சோதனை செய்தனர்.

உள்ளே யாரும் இல்லை என உறுதி செய்தபின் உடனடியாக எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு வீட்டுக்குள் யாரும் செல்லாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டது வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்துக் கொண்டதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

Leave a Reply

error: Content is protected !!