விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி அடுத்துள்ள சோழராஜபுரம் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் 1500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது இந்த பகுதி ஊர் கடைக்கோடி பகுதியாக உள்ளதால் பொதுமக்கள் சிறமப்பட்டு சென்று ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இருப்பினும் இந்த கடையில் உள்ள விற்பனையாளர் இரண்டு கடைகளை சேர்ந்து பார்ப்பதால் சரியாக வருவதில்லை என்றும் அப்படி வந்தால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு கை ரேகை வைக்கும்போது இயந்திரம் பழுதடைந்ததால் பொதுமக்கள் அலக்களிக்கப்படு
வருவதாகவும். அதேபோல் வழங்கப்படும் பொருட்களின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும் 20 கிலோ அரிசி வாங்கினால் 15 கிலோ அரிசி மட்டுமே இருப்பதாக கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் உடன் இணைந்து அப்பகுதி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் DSO ராமநாதன்.
RI
கோட்டைராஜ் , பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.