தரகர்களின் கூடாரமாக மாறி வரும் தாசில்தார் அலுவலகம்…மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர்களோடு கைகோர்த்து தரகர்கள்,ஓட்டுநர்கள் அட்டூழியம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியருக்கு அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வதற்கு அரசு சார்பாக பொலிரோ ஜீப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கு வாகனத்தை இயக்குவதற்கு ஓட்டுனர் ஒருவரையும் அரசு நியமித்து உள்ளனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வட்டாட்சியர் வாகனத்தை பிரத்யோக ஓட்டுனர் ஓட்டவில்லை எனவும் அதற்கு பதில் திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக உதவியாளர் (தலையாரி) வாகனத்தை இயக்குவதாகவும் அவரது பணியை செய்ய கிராம நிர்வாக அலுவலகம் செல்லாமல் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும் மேலும் எந்த தாசில்தார் வந்தாலும் இவர்தான் வாகனத்தை இயக்குவதாகவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இவரது தலையீடு அதிக அளவில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்பும் கேள்விகள்:

அரசு நியமித்த கார் டிரைவர் எங்கே..?

கிராம நிர்வாக உதவியாளர் (தலையாரி)க்கு யார் சம்பளம் கொடுக்கிறார்..?

இரட்டை சம்பளம் பெறுகிறாரா..?

அரசு வாகனத்தை இயக்குவதற்கு கிராம நிர்வாக உதவியாளர்(தலையாரி)க்கு அனுமதி கொடுத்தது யார்..?

எந்த ஒரு தாசில்தார் வந்தாலும் இவரை இயக்குவதற்கு காரணம் என்ன..?

அனைத்து தாசில்தாருக்கு இவர் வலது கையாக செயல்படுவதாகும் தாசில்தாருக்கு இவர் வாகனத்தை இயக்குவது தெரியாதா..?என பல கேள்விகளை முன்வைக்கின்றனர்.

மேலும் அரசு பணியில் இல்லாத சிலர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கடைநிலை ஊழியர்களோடு கைகோர்த்து கொண்டு அரசு திட்டங்களை பெற,பட்டா வழங்கல், நில அளவைப் பணி, வாக்காளர் பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளை செய்ய லஞ்சம் பெற்று மறைமுக முகவர்களாக செயல்பட்டு தரகு வேலை செய்து தாசில்தாரை கூட பார்க்க பல காரணங்களைக் கூறி அனுமதிக்காமல் அலக்கழிப்பு செய்து வருவதால் பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே காரியம் நிறைவேறுகிறது. தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கிறார்களா..? இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

error: Content is protected !!