நாம் தமிழர் கட்சியின் களப்போராளி கடல் தீபன் மரணம்… இன்று மாலை இறுதி ஊர்வலம்

காஷ்மீரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து இந்திய அரசால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட யாசின் மாலிக் போன்றவர்களை தன் மண்ணிற்கு அழைத்துவந்து போராட்டம் நடத்தினார், மத்திய மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட காலத்தில், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத காலகட்டத்தில் மதுரையிலிருந்து மாடுகளை அழைத்துவந்து ஜல்லிக்கட்டை கடலூர் மண்ணில் நடத்தினார்.

கடலூர் மாவட்டம் செல்லகுப்பத்தைச் சேர்ந்தவர் கடல் தீபன். பொறியாளரான இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் கடல் தீபன்.

இது போன்ற எண்ணற்ற வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்ததில் காவிரி நதி நீர் பிரச்சனையின் போது போராட்டத்தில் ஈடுபட்டு குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கடல் தீபன் பின்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் கடல் தீபன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய களப்போராளியை இழந்து விட்டது. கடல் தீபனின் மரணம் சீமானை மட்டும் அல்ல அக்கட்சியின் பலரையும் நிலைகுலையச் செய்துள்ளது.

இது நாம் தமிழர் கட்சியினருக்கு மிகப் பெரிய இழப்பு. கடல் தீபனின் மறைவு செய்தி கேட்டு நாம் தமிழர் கட்சியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு சோனாங்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!