திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மருமகள் அந்த குடும்பத்தின் லட்சுமியாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட மணப்பெண்ணை வீட்டிற்குள் வரவேற்க பலவிதமான சம்பிரதாயம் காலம் காலமாக இருந்து வருகிறது. முதன்முறையாக வரும் மாமியார் வீட்டிற்கு வரும் மணமகள் குடம்நிறைய நீர் எடுத்து வருவது, கையில் விளக்கேந்தி வருவது என்று ஒவ்வொன்று உள்ளது.
மணமகள் திருமணம் முடிந்து மாமியர் வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். அந்த அனுபவம் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும்விதமாக இருக்க வேண்டும். ஆனால் மணமகள் ஒருவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் போதே இப்படியா? என்பது போன்ற சலிப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் கலக்கி வருகிறது.
இதுப்போன்று ஒரு சம்பிரதாயம் தான் அரிசி அளக்கும் படி முழுவதும் அரிசியை கொட்டி வைத்து அதை எட்டி உதைத்து புதுமணப்பெண்ணை வரவேற்பது. ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் மணப்பெண் அரிசி நிறைந்திருக்கும் படியை கால்பந்தை எட்டி உதைப்பது போல் வேகமாக எட்டி உதை்து வருகிறாள். அரிசி வீடு முழுவதும் இறைந்து விடுகிறது. இது அங்கிருந்த உறவினர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.