மதுரை திருமங்கலம் அருகே நேருக்கு நேர் கார் மோதியதில் 3 பேர் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த டி.குன்னத்தூரில் இன்னோவா காரும், மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதியது . இதில் ஒரு காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு காருக்குள் இருந்த ஒருவர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இறந்தவர்கள் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் குறித்தும் விபத்து குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!