உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் 23 லட்சம் கிடைக்கும்…மத்திய அரசின் அருமையான திட்டம்.


உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களா? நகையைக் காட்டிலும் பணத்தை அவர்களுக்காக எப்படியெல்லாம் சேமிக்கலாம் என தெரிந்துகொள்ளுங்கள்.

14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக உங்கள் மகளின் பெயரில் இருக்கும்.

பெண் பிள்ளைகள் எப்போதுமே ஒரு குடும்பத்தின் எதிர்காலமாகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்று. பலரும் பெண் பிள்ளைகள் பிறந்தவுடனே நகை சேர்க்க தொடங்கிவிடுகின்றனர். ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள் நகை விக்குற விலையில இப்ப ஒவ்வொரு மாதமும் 1 கிராம் வாங்கி நகை சேர்ப்பது என்பது மிடில் கிளாஸ் மக்களால் முடியாத ஒன்று. ஆனால் அதற்கு பதில் பெண் பிள்ளைகளுக்காக மட்டுமே பல சிறப்பான சேமிப்பு திட்டங்கள் வங்கிகளிலும், அஞ்சல் அலுவலகங்களிலும் புழகத்தில் உள்ளன. அதைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சுகன்யா சம்ரிதி திட்டம்:

குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம்.கணக்கைத் திறக்க, நீங்கள் வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும். நீங்கள் ரூ .250 முதல் 1.50 லட்சம் வரை எந்த தொகையையும் செலுத்தலாம்.அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.

மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை மட்டுமே தொடர முடியும். எனவே ஓராண்டிற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்சம் ஆகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின், வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது. இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 என 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக உங்கள் மகளின் பெயரில் இருக்கும். வேறேன்ன வேண்டும்? உடனே புறப்படுங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அஞ்சலகம் அல்லது வங்கிகளில் இந்த திட்டத்தை தொடங்குங்கள்.

பணச்செல்வம், நகைசெல்வம் இவை எல்லாவற்றைக் காட்டிலும் கல்வி செல்வம் பெண் பிள்ளைகளுக்கு இன்றியமையாத ஒன்று அதை தரவும் மறந்துவிடாதீர்கள்.

Leave a Reply

error: Content is protected !!