கொரானா வைரஸ் நோய்த்தொற்று கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.
கொரோனா வைரஸின் இரண்டம் அலை இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் தளர்வாக, 2019ஆம் ஆண்டில் நாம் நடமாடியதைப் போல வெளியே சுற்றித் திரிய முடியாது. இப்போதும் கொரோனா நமக்கு மத்தியில் தான் இருக்கிறது.
இப்போது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தன் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் என அது கூறியிருந்தது.
இதில் ஒரே ஒறு ஆறுதல் என்னவென்றால், இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது எனக் கூறியுள்ளது ஐ.சி.எம்.ஆர்.
ஒவ்வொரு மாநிலமும் தங்களது கொரோனா பாதிப்பு குறித்து தங்களிடம் இருக்கும் தரவுகளை ஆராய்ந்து, மாநிலம் கொரோனாவின் எந்த நிலையில் இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்” என ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை எனவும் அவர் எச்சரித்து இருந்தார்.
கொரோனா மூன்றாம் அலை எப்போது வரும்? அது எத்தனை தீவிரமாக இருக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன.
ஒருவேளை கொரோனா வைரசின் மூன்றாம் அலை உருவானால், 2021 ஆகஸ்ட் மாத இறுதியில் அது இந்தியாவைத் தாக்கலாம் என கூறியிருந்தார் மருத்துவர் சமீரன் பண்டா.
இந்த நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒன்றாக வைத்து பேசக் கூடாது, காரணம் கொரோனா பெருந்தொற்று ஒவ்வொரு மாநிலத்தையும் பல்வேறு வகையில் பாதித்து இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாநிலத்துக்குத் தகுந்தவாறு தரவுகளை பகுப்பாய்வு செய்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் சமீரன் பண்டா.
எனவே மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சானிடைசர் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவது, காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயத் தடுப்பூசி:
தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசும் தகுந்த ஏற்பாடுகளை செய்து மாநிலம் முழுவதும் முகாம்களை ஏற்பாடு செய்து தடுப்பூசி போட்டு வந்து கொண்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் தாங்கள் பணி செய்ய முடியாது எனவும், மேலும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கு வரும் சுகாதாரத்துறையினர் கர்ப்பிணிகள் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் இல்லையென்றால் உங்கள் குழந்தைகளை கொடுக்க இயலாது எனவும் வயதான முதியவர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் ரேஷன் பொருள் வாங்க இயலாது எனவும் மறைமுக ஆதிக்கத்தையும் அரசு செலுத்தி வருகிறது.

இதனால் தடுப்பூசி மீது அச்சமுள்ளவர்களும் அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத சிலர் தடுப்பூசி போடாமல் மனக்குமுறல்களோடு கடந்து செல்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன?
“துரதிர்ஷ்டவசமாக நாம் கொரோனா வைரஸ் மூன்றாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்” என சில நாட்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் “கொரோனா வைரசின் டெல்டா திரிபு 111 நாடுகளில் பரவியுள்ளது. இத்திரிபு உலகில் கொரோனா வைரசைப் பரப்பும் முக்கிய திரிபாக உருவெடுக்கலாம்” என்றும் எச்சரித்தார் டெட்ரோஸ்.
இந்திய மருத்துவக் கழகமும் (ஐ.எம்.ஏ.) கொரோனா மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது எனக் கூறியது. எனவே ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என்றும் ஐ.எம்.ஏ. கேட்டுக்கொண்டது.
கட்டுப்பாடுகளை மீறி மக்கள் கூட்டமாகக் கூடுவது தீவிரமாக கொரோனா பரவ வழிவகுக்கும். எனவே சுற்றுலா, மதம் சார் கூட்டங்கள், புனித யாத்திரை போன்றவைகளை இன்னும் சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் ஐ.எம்.ஏ. கூறியது.
மருத்துவ பயங்கரவாதம்:
தடுப்பூசிக்கு எதிரான போராட்ட வடிவங்களை பல்வேறு நாடுகளிலும் எடுத்துவந்து கொண்டிருப்பதும். லண்டனில் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினார்கள்.அதைத்தொடர்ந்து டெல்லியிலும் தடுப்பூசிக்கெதிராக போர்க்கொடி தூக்கியதையும் நாம் அறிந்தோம்..! ஆனால் தமிழ்நாட்டில் முதல்முறையாக தடுப்பூசிக்கெதிராக

“தடுப்பூசி வேண்டவே வேண்டாம்”
“மருத்துவ பயங்கரவாததிற்கு எதிரான உரிமை போராட்டம்” என்ற முழக்கத்தை போராட்ட வடிவமாகமும் முன்னெடுத்து வருகின்றனர்.
தடுப்பூசிக்கு எதிரான உரிமைப்போராட்டம் :
அரசியல்வாதிகள் விலை போய் விட்டனர். அதிகாரிகள் இருக்கின்ற வாழ்வை கெடுத்துக் கொள்ள விரும்புவதில்லை. மருத்துவர்கள் தங்கள் தொழிலை இழக்க விரும்பவில்லை. மக்களோ அரசு நன்மை மட்டுமே செய்யும் என்ற மூட நம்பிக்கையில் உள்ளனர். நாங்கள் கேட்கும் எளிமையான சில கேள்விகளுக்கு மேதாவிகள் பதில் கூறி விட்டால் நாங்கள் இந்த போராட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இல்லையேல் திட்டமிட்டபடி, சட்டப்படி , தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் மூலம் தீர்வு காணப்படும்.
மனிதர்களின் உடலில் உள்ள அனைத்து விதமான வைரசு மற்றும் நுண்ணுயிர்களை இனம் கண்டு அடையாளப்படுத்தி விட முடியுமா? மனித உடலில் நன்மை பயக்கும் வைரசுகள் உள்ளதா இல்லையா? தடுப்பூசி மற்றும் ஆங்கில மருந்துகள் அவற்றை அழித்து விடாதா? எந்த நோயானாலும் ஆங்கில (தீவிரவாத) மருந்து மட்டுமே தீர்வா? நமது பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள பாரம்பரிய மருத்துவத்தை ஏன் அழிக்கிரீர்கள்?
தடுப்பூசியை கட்டாயப் படுத்தும் நீங்கள் கபசுரக் குடிநீரை ஏன் கட்டாயப் படுத்தவில்லை. காரணம் ஒன்றுதான் உங்களுக்கு கமிஷன் கிடைக்காது. தடுப்பூசி மட்டுமல்ல இதர ஆங்கில மருந்துகளால் கடந்த இருபது ஆண்டுகளாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது?
உங்களால் பதிலளிக்க இயலவில்லை எனில் எங்கள் கோரிக்கைகளை எல்லோரும் கேளுங்கள்.
- மாதம் மூன்று நாட்கள் அனைவருக்கும் கட்டாயம் கபசுரக் குடிநீரை குடிக்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.
- தடுப்பூசி போட்ட அனைவருக்கும் அடுத்த பத்து ஆண்டுகள் என்ன பக்க விளைவு ஏற்பட்டாலும் அரசோ மருந்து நிறுவனமோ இழப்பீடு வழங்குவதுடன் மருத்துவ செலவையும் ஏற்க வேண்டும்.
- மத்திய அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை விருப்பமுள்ளவர்களுக்கு என்று மாற்றி அறிவிக்க வேண்டும்.
- மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரிகளை உடனே துவங்க வேண்டும்.
5.பாரம்பரிய மருத்துவர்களை உடனே மருத்துவம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.இயற்கை மருத்துவத்தை தலைதூக்க செய்ய வேண்டும் எனவும்
- தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன என்றும் . கட்டாயம் இல்லை என்றும் அரசே அனைத்து செய்தி ஊடகங்களிலும் விளக்கமாக விளம்பரம் செய்ய வேண்டும் என
தற்சார்பு மக்கள் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்து Google News தளத்தை Follow செய்யுங்கள்