கோவா, கொச்சி,சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்: நாசா எச்சரிக்கை

2100ம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக தமிழகத்தின்  தலைநகர் சென்னை 1.87 அடியும் மற்றொரு மாவட்டமான தூத்துக்குடி 1.9 அடியும் கடலில் மூழ்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது.

2100ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 12 கடற்கரையோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி (IPCC)  தனது ஆய்வு அறிக்கையை நேற்று ஜெனிவாவில் தாக்கல் செய்திருந்தது. Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட அந்த  அறிக்கையில் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பருவநிலை மாற்றங்கள், பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள 12 நகரங்கள் பின்வருமாறு,

குஜராத் மாநிலத்தில் கண்ட்லா 1.87 அடி
ஒக்ஹா 1.96 அடி
பவுநகர் 2.70 அடி
மகாராஷ்டிராவின் மும்பை 1.90 அடி
கோவாவின் மோர்முகாவ் 2.06 அடி
கர்நாடகாவின் மங்களூர் 1.87 அடி
கேரளாவின் கொச்சி 2.32 அடி
ஒடிசாவின் பரதீப் 1.93 அடி
கொல்கத்தாவின் கிதிர்பூர் 0.49 அடி
ஆந்திராவின் விசாகப்பட்டினம் 1.77 அடி
தமிழகத்தின் சென்னை 1.87 அடி
தூத்துக்குடி 1.9 அடி
தற்போதைய கால நிலையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் எனவும்
இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!