100 கோடி வசூல்..! OTTக்கு வரும் அரண்மனை 4.. எப்போது ரிலீஸ் தெரியுமா

அரண்மனை 4

சுந்தர் சி-யின் ட்ரேட் மார்க் திரைப்படம் அரண்மனை. இதனுடைய நான்காம் பாகம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

உலகளவில் அரண்மனை 4 திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. 2024ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.

100 கோடி வசூல்..! OTTக்கு வரும் அரண்மனை 4.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Aranamanai 4 On Ott

இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

OTT

இந்த நிலையில், திரையரங்கில் வெற்றியை தன்வசப்படுத்திய அரண்மனை 4 திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளிவரவுள்ளது என அறிவித்துள்ளனர்.

100 கோடி வசூல்..! OTTக்கு வரும் அரண்மனை 4.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Aranamanai 4 On Ott

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை OTT-யில் வெளியிடவுள்ளனர். ஆனால், எந்த தேதியில் இப்படம் OTT-யில் வெளியாகிறது என அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!