திருப்பரங்குன்றம் அருகே பிளஸ்-2 தேர்வில் 4 பாடத்தில் 100-க்கு 100 எடுத்து சாதனை!

திருப்பரங்குன்றம் அருகே பிளஸ்-2 தேர்வில் 4 பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 8) காலை 10 மணிக்கு வெளியாகியுள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385, மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 13, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 என்று கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி என்பவர் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொறியியல்அறிவியல் , உள்ளிட்ட படங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600க்கும் 600 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடத்திலும், தமிழகத்திலும் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலை யூர் ஊராட்சிக்குட்பட்ட கைத்தறி நகரில் உள்ள மீனாட்சி காலனியை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான ஆர்.ஆர்.சீனிவாசன்-ஆர்.எஸ். ரமிலா ஆகியோரது மகன் ஆர்.எஸ். ராஜேஷ். இவர் மதுரையில் உள்ள தியாகராஜர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார்.

இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு ரிசல்ட் வெளியானது. அதில் 600-க்கு 594 மதிப்பெண் எடுத் துள்ளார். எக்னாமிஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட் டர் அப்ளிகேசன் ஆகிய 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஆங்கிலத்தில் 100-க்கு 99 மதிப்பெண்ணும், தமிழில் 100-க்கு 95 மதிப்பெண் எடுத்துள் ளார். மாணவன் ஆர்.எஸ். ராஜேஷை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி

னர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!