கொடைக்கானலில் யானைகள் நடமாட்டம் – சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பு -வீடியோ

கொடைக்கானல் யானைகள் நடமாட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந் நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரியை பார்க்க அதிகமாக விரும்புவார்கள் ஆனால் இந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது வன விலங்குகளான சிறுத்தை,புலி,யானை,காட்டெருமைகள் அதிக நடமாட்டம் இருந்து வருவதால் வனத்துறையினர் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும். இதையடுத்து இன்று வழக்கம் போல சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் பகுதியை பார்ப்பதற்கு அனுமதி பெறுவதற்காக வனத்துறை அலுவலகத்தில் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனர்.ஆனால் பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!