நாம் தமிழர் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பாக கருவேலம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் தீவிரமாக பல்வேறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது அதன்படி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நிலையூர் 2வது பிட் ஊராட்சியை சேர்ந்த கருவேலம்பட்டி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வீடு வீடாக சென்று: நாம் தமிழர் ஆட்சி வேண்டும்! ஏன்?

வேளாண்மை அரசு பணி, தரமான மருத்துவம், தரமான கல்வி, ஆடு மாடு கோழி வளர்த்தல் அரசு பணி, தற்சார்பு பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆண் பெண் சமத்துவம், மது போதைப் பொருள் ஒழிப்பு, கையூட்டு (லஞ்ச) ஊழல் ஒழிப்பு, விளையாட்டு மேம்பாடு, தமிழர் அறம் சார்ந்த ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம் என கட்சியின் கொள்கைகள் தாங்கிய துண்டறிக்கையை கருவேலம்பட்டி கிராமத்தில் உள்ள 6வார்டுகளிலும் வீடு வீடாக சென்று வழங்கினர்.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகுராஜா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டித்துரை அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் மதுரை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் முருகன் திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் ஆறுமுகம், திருப்பரங்குன்றம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் வடிவேலன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செயமாயவேல், செந்தில்குமார், முத்துப்பாண்டி, அவனியாபுரம் பகுதி செயலாளர் முத்துமணி, விளாச்சேரி தங்கமணி, தனக்கன்குளம் முகமது அன்சார்,வேடர் புளியங்குளம் ராமர், ஹரிராம்,தோப்பூர் சோணைமுத்து, முத்துப்பாண்டி, சங்கர், திருநகர் சங்கர், கூத்தியார்குண்டு குருமூர்ததி, அருண்கு மார், கருவேலம்பட்டி கண்ணன், சதீஸ் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!