கொடைக்கானல் அருகே அடுக்கம் கிராமத்தில் கோயிலுக்குச் செல்ல பாதை கேட்டு பொது மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

கொடைக்கானல் அருகே அடுக்கம் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் சுமார் 35−ஆண்டுகளுக்கு முன்பு இருந்து முருகன் கோயில் கட்டப்பட்டு அந்த கோயிலை அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.இந் நிலையில் முருகன் கோயில் உள்ள பகுதியில் வெளியூரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தோட்டம் வாங்கி உள்ளதாக கூறி , வீடு கட்டி வசித்து வருகிறார்.35 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தியும் பல்வேறு நிகழ்ச்சி முருகன் கோயிலில் நடைபெற்று வந்துள்ளது.
இந் நிலையில் சமீப காலமாக முருகன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மகேஸ்வரி என்பவர் அடைத்து வைத்துள்ளார். இதனால் அப் பகுதி மக்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் இருந்து வந்தனர். இது குறித்து அப் பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமத் தலைவர் மற்றும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். ஆனால் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் கொடைக்கானல் காவல் நிலையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அடுக்கம் பகுதி மக்கள் சுமார் 100−பேர் மேல் இன்று கொடைக்கானல் வருவாய்த்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு முருகன் கோயிலுக்குச் செல்லும் பாதையை அடைத்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,கோயிலுக்குச் செல்ல பாதை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அலுவலகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து டி.எஸ்.பி.மதுமதி, மற்றும் கோட்டாட்சியர், தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கிராம மக்களிடம் 10−நாட்களுக்குள் சுமூகமான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொது மக்கள் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கலைந்து சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.