திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களில் அடிக்கடி போலியான டிக்கெட் பரிசோதகர் நடமாடுவதாக புகார் – கண்டுகொள்ளுமா ரயில்வே துறை

கடந்த சில நாட்களுக்கு முன் 06.06.2023 அன்று மாலையில் திருநெல்வேலி திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலில் 25 வயது மதிக்க தக்க ஒரு நபர் தான் ஒரு டிக்கெட் பரிசோதகர் என கூறிக்கொண்டு ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து குடும்பமாக வந்த சிலரிடம் குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறி, டிக்கெட் எடுக்க வில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டும் என்று சொல்லி ஒரு சிலரிடம் அபராதத் தொகையை வசூலித்துள்ளார், விபரம் அறியாத பயணிகள் அந்த அபராத தொகையை கட்டியுள்ளனர்.
அப்போது அதே ரயிலில் வழக்கமாக பயணம் செய்யும் சிலரிடம் இதே போல் நடக்க முயன்ற போது அவர்கள் சுதாரித்துக் கொண்டு நீங்கள் யார் என்று கேட்டு அந்த டிக்கெட் பரிசோதகரை வினாவ தொடங்கினர், மேலும் அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கூறியபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார், தப்பி ஓடிய போலி டிக்கெட் பரிசோதகர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இறங்கி ஓடி மறைந்து விட்டார், இது குறித்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்த போது அவர் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
அப்படியானால் அந்தப் போலியான டிக்கெட் பரிசோதகர்களை ரயில்வே நிர்வாகம் ஊக்கப்படுத்துகிறதா? போலி டிக்கெட் பரிசோதனை செய்யும் நபரை கண்டு கொள்ளாதது ஏன், என பயணிகளிடம் கேள்வி எழுந்துள்ளது. அதேபோல கடந்த வாரத்தில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் அதிகாரிக்கு தமிழ் மொழி தெரியாத காரணத்தினால், டிக்கெட் கொடுக்காமல் விட்டதில் சுமார் 300 பயணிகள் ரயிலில் பயணம் செய்தது என ஏற்கனவே செய்தி வெளியானது. இந்நிலையில் போலி டிக்கெட் பரிசோதகர் நடமாட்டம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ரயில்வே துறையில் மெத்தன போக்கை காட்டுகிறது என ரயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Thanks: Chendur Times
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.