இந்தியா மீது ஏன் கோபம் ? சோயிப் அக்தருக்கு திருப்பி கொடுத்த ரசிகர்கள் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தேவையில்லாமல் இந்தியாவை விமர்சித்து பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

டி20 உலகக் கிண்ணம் 2022 – ICC T20 World Cup 2022

டி20 உலக கோப்பையில் பி பிரிவிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டியில் வென்று முதல் இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான அணி இன்னும் புள்ளிக் கணக்கு தொடங்காமல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியதற்கு அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் தேர்வு சரி இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தோற்றால் பாகிஸ்தான் அணியை விமர்சிப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்நாட்டின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தேவையில்லாமல் இந்தியாவை விமர்சித்து பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், எனக்கு மிகவும் கோபம் வருகிறது நான் ஏதும் தவறாக பேசிட கூடாது என நினைக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல் பாகிஸ்தான் இந்த வாரமே நாடு திரும்பி விடும். ஆனால் இந்திய அணிஅரை இறுதிச்சுற்று விளையாடிவிட்டு அடுத்த வாரம் திரும்பி வந்துவிடும். 

இந்திய அணி வீழ்த்தவே முடியாத அணி கிடையாது. நாமும் அப்படித்தான் என்று சோயிப் அக்தர் பேசியிருக்கிறார். சோயிப் அக்தரின் இந்த பேச்சு இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியை குறித்து கவலைப்படுங்கள். எங்கள் அணியை குறித்து நீங்கள் ஏன் கருத்து சொல்கிறீர்கள் என்று பதிலுக்கு பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் சிலர் இந்திய பெற்ற வெற்றியால் பொறாமைப்படும் அக்தர், இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!