Covid 19 தடுப்பூசியா..? தப்பூசியா..? தடுப்பூசி போடாதவர்களுக்கு நற்செய்தி…

இதுவரை கொரானா தடுப்பூசி ஆதரவாளர்கள் சொன்ன காரணம், அது கொரானா வருவதை குறைக்கும். பிறருக்கு பரப்புவதை குறைக்கும். ஆகவே அதை போட வேண்டும் என்பதுதான்.

இதை அடிப்படையாக வைத்தே பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள் எங்கும் கொரானா தடுப்பூசி போட்ட சான்றிதழை காட்ட வேண்டும், நாடுகளிடையே செல்ல தடுப்பூசி பாஸ்போர்ட் வேண்டும் என திணிப்பு வேலை நடந்தது.

தடுப்பூசி விமர்சகர்கள் பிற்போக்குவாதிகளாக காட்டப்பட்டனர்.

இந்த வாரம் அமெரிக்க நோய் கட்டுபாடு துறை ரகசிய ஆவணங்கள் பொதுவெளியில் வந்துள்ளன. அதில் அமெரிக்காவில் பரவும் டெல்டா வைரசை ஆராய்ந்ததில்,

தடுப்பூசி போட்டவர்களிலும் அதிகளவு கொரானா வைரஸ் இருந்தது அறியப்பட்டது. மேலும் தடுப்பூசி போட்டவர்களும் அருகே உள்ளவர்களுக்கு கொரானாவை பரப்புவதும் அம்பலமானது. தடுப்பூசி போட்டவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தடுப்பூசி செயல்திறன், நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானதால், அமெரிக்க நோய் கட்டுப்பாடு துறை, தடுப்பூசி போட்டால் நோய் தீவிரமாக வராது என்ற அளவில் மட்டும் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளது.

இதன் விளைவுகள்,

1) தடுப்பூசி போட்டவர்கள் கொரானாவை பரப்ப மாட்டார்கள் என்பது பொய்யானதால், தடுப்பூசி கட்டாயம் என்பது அர்த்தமற்றதாகும்.

2) தடுப்பூசி போட்டவர்கள், போடாதவரையும் ஒரே அளவில் கொரானா தாக்கும், பரப்புவர் என்பதால் தடுப்பூசி சான்றிதழ் கேட்பது, தடுப்பூசி போட்டால் சலுகை இதெல்லாம் அர்த்தமற்றதாகிறது.

3) தடுப்பூசி போட்டு வரும் எதிர்ப்பு சக்தியால் கொரானாவை தடுக்க முடியாது என்பதால் அதன் பெயர் தடுப்பூசி என்பதே அர்த்தமற்றதாகிறது.

இந்த பரிசோதனை தடுப்பூசி தேவை இல்லை, உடல் நலனில் கவனம் செலுத்தினாலே போதும் என்ற தடுப்பூசி விமர்சகர்களுக்கு இது அறிவியல் ரீதியிலான மிக பெரிய வெற்றி ஆகும்.

Source: washington post

One thought on “Covid 19 தடுப்பூசியா..? தப்பூசியா..? தடுப்பூசி போடாதவர்களுக்கு நற்செய்தி…

Leave a Reply

error: Content is protected !!