
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் போனான ‘X Fold 3 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் ‘X Fold 3 புரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெக்ஸ்ட் ஜெனரேஷன் போன்களாக இந்த ஃபோல்டபிள் போன்கள் பார்க்கப்படுகின்றன. கடந்த 2022-ல் ‘X ஃபோல்ட்’ போனை விவோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
X Fold 3 புரோ – சிறப்பு அம்சங்கள்
- 6.53 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே
- 8.03 இன்ச் பிரைமரி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 சிப்செட்
- 16ஜிபி ரேம்
- 512ஜிபி ஸ்டோரேஜ்
- 50 + 64 + 50 மெகாபிக்சல் என மூன்று கேமராக்கள் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- ட்யூயல் நானோ சிம் கார்டுகளை இதில் பயன்படுத்தலாம்
- 5,700mAh பேட்டரி
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.1,59,999
- இந்த போனின் ஃப்ரீ புக்கிங் இந்தியாவில் தொடங்கியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.