திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் புதிய துணை ஆணையர் பதவியேற்பு!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் புதிய துணை ஆணையர் பதவியேற்பு!


ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனராக சூரியநாராயணன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாற்றலாகி சென்றார்.

இந்த நிலையில் அழகர்கோவில் துணை கமிஷனரான யக்ஞ்நாராயணன் (பொறுப்பு) ஏற்று கவனித்து வந்தார். இதற்கிடையில் துணை கமிஷனர் யக்ஞ் நாராயணன் விடுமுறையில் சென்றார். இந்த நிலையில் இந்து சமய அறநிலை துறையின் மதுரை மண்டல இணை கமிஷனர் செ.மாரியப்பன் கூடுதல் பொறுப்பு ஏற்று கவனித்து வந்தார்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று துணை கமிஷனராக ரா.ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் இந்து சமய அறநிலை துறையின் உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

11.02.2026 இன்று மதுரை திருப்பரங்குன்றம் சுவாமி திருக்கோவிலின் புதிய துணை ஆணையர், செயல் அலுவலராக ரா.ஞானசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!