நான் செய்த தவறால் வந்த வினை, அனுபவித்த மோசமான விஷயம்… பூர்ணிமா பாக்யராஜ் எமோஷ்னல்

பூர்ணிமா பாக்யராஜ்

80களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் பூர்ணிமா பாக்யராஜ்.

இவர் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

எல்லா நடிகைகளை போல திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த பூர்ணிமா இப்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வருகிறார்.

நடிப்பதை தாண்டி இவர் சொந்தமாக ஜுவல்லரி மற்றும் ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்களையும் பிஸியாக செய்து வருகிறாராம்.

நான் செய்த தவறால் வந்த வினை, அனுபவித்த மோசமான விஷயம்... பூர்ணிமா பாக்யராஜ் எமோஷ்னல் | Poornima Bhagyaraj About Her Poor Health

நடிகையின் பேட்டி

இந்த நிலையில் நடிகை பூர்ணிமா ஒரு பேட்டியில், நான் திருமணத்திற்கு பிறகு என்னுடைய தொழிலில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். எனக்கு சமைக்கவே தெரியாது, என்னால் இன்ட்ரஸ்ட் ஆக சமையல் செய்ய முடியாமல் ஆகிவிட்டது.

அதேபோல் நான் என்னுடைய உடல் நிலையை சரியாக கவனிக்காததால் சில வருடங்களுக்கு முன்பு நான் உடல்எடை கூடி விட்டேன். பிறகு என்னை புரிந்துகொண்டு யோகா, நடைப்பயிற்சி செய்து இப்போது பழைய நிலைக்கு வந்துவிட்டேன்.

சில வருடங்களுக்கு முன்பு நான் சாப்பாட்டில் கவனம் வைக்காததால் வந்த வினை உடல் எடை கூடி இருந்தது. அதைப்பார்த்து நானே அதிர்ச்சி இடையும் அளவிற்கு மாறிப் போயிருந்தது.

இதனால் வேலை என்று ஓடிக் கொண்டிருந்தாலும் நம்முடைய உடம்பையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

நான் செய்த தவறால் வந்த வினை, அனுபவித்த மோசமான விஷயம்... பூர்ணிமா பாக்யராஜ் எமோஷ்னல் | Poornima Bhagyaraj About Her Poor Health

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!