தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ தவறிவிட்டுச் சென்றதை கண்ட சுந்தரபாண்டி மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் அந்த பணத்தை எடுத்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சிலைமணியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
பணத்தை தவறவிட்ட உரிமையாளரை அடையாளம் கண்டதில் பகவதிராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்ததையடுத்து அவரை நேரில் வரவழைத்து உரிய விசாரணைக்கு பின் ரூ.1 லட்சம் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.
ஏ.டி.எம் மையத்தில் கண்ட பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களின் செயலை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நு.சாய்சரண் தேஜஸ்வி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.