
திருமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி கோவிலுக்கு ஆயிரக் கணக்கில் குடும்பத்துடன் குவியும் பக்தர்கள் – அனைத்து பக்தர்களுக்கும் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.
எஸ் .கோபாலபுரம் கிராமமே வண்ண வண்ண மின்னொளியில் ஜொலிப்பதால் கிராமமே விழாக்கோலம் பூண்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ் கோபாலபுரம் ,. அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டிசாமி திருக்கோவிலில் தைப்பொங்கல் திருநாளில் , ஸ்ரீ முனியாண்டி சாமி பெயரில் அசைவ உணவகம் நடத்திவரும் தொழிலதிபர்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட அயல் நாடுகளில் உள்ள அனைவரும் குடும்பத்துடன், திருமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோவிலுக்கு தஞ்சம் அடைவர். இவர்கள் இரண்டு நாட்களாக திருவிழாவில் பங்கு கொண்டு சாமிக்கு மலர் தட்டுக்களுடன் ஊர்வலமாக நகர் வீதியில் வலம் வந்து , கோயிலை அடைந்தபின் அங்கு முனியாண்டி சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழா காரணமாக எஸ். கோபாலபுரம் கிராமமே வண்ண வண்ண மின்னொளியில் ஜொலித்து கிராமமே விழாக் கோலம் பூண்டுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.