நமது தேசத்தின் 74-வது குடியரசு தினவிழா ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நமது தேசத்துக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து இந்தியா முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்த நாள் 1950 ஜனவரி 26 ஜனவரி 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாத்தில் நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தேசிய கொடி ஏற்றினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வந்தனர். அந்தவகையில் திருச்சியில் தேசிய கொடியேற்றம் நிகழ்வு எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு தொகுதி 29 வது வார்டு தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. திருச்சிபாலக்கரை கிளைச் செயலாளர் இரும்பு கடை முஸ்தபா முன்னிலையில் மாவட்டச் செயலாளர் பகுருதீன் அவர்கள் ஏற்றி வைத்தார். நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக முகமது சலீம் ஆரிப் சமூக ஊடக அணி தலைவர் உபயதுர் ரஹ்மான் மற்றும் பெரோஸ் கான் ஆகியோர் முன்னிலையில் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

சல்யூட் அடித்த யானை:
வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் முன்பு தேசியகொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் யானை காந்திமதி பிளிறிய சத்தத்துடன் தனது தும்பிக்கையால் தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்தது. இதை தொடர்ந்து அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது யானைக்கு பழங்கள் வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.