திருப்பரங்குன்றம் அருகே ஓடையில் வாலிபர் பிணம்
திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள ஓடையில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை.
மதுரை தென்பரங்குன்றம் பெரிய ரதவீதியை சேர்ந்த பிட்சை மணி மகன் வெங்கடேஷ் (வயது 40). இவரது மனைவி பெயர் இந்திரா (வயது 32) இவர்களுக்கு மகன் ஹர்ஷவர்தன் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
வெங்கடேஷ் மனைவி பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணவருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து நகைகளை அடகு வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவ என்று இது தொடர்பாக நேற்று காலை ஏற்பட்ட சண்டையில் வெங்கடேஷ் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை நாலு மணி அளவில் வெங்கடேசன் குடல் மூலக்கரை அருகே ஓடையில் கண்டுபிடிக்கப்பட்டது –
இரண்டு நாட்களாக ஓடை தண்ணீரில் ஊறிய உரிய நிலையில் தலைகீழாக கிடந்ததை திறந்து அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு போராட்டம் அதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று இறந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்தபோது தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தெரியவந்தது.
இதனையடுத்து வெங்கடேசன் உடலை உடற்கூறு பரிசோதனை ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.