
திருப்பரங்குன்றம் கோவிலில் ஸ்கந்த ஹோம சிறப்பு பூஜை.. மனமருகிய மலேசிய பக்தர்கள்!

முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வீகம், மணம், மகிழ்ச்சி என்ற ஆறு பொருள்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்டவன் என்பதால் முருகன் எனப்படுகிறான் நம் தமிழ் கடவுள். தேவர்களில் அவனே உயர்வானவன், அதனாலேயே முருகன் மலையின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறான். நாமாவளிப் பிரியனான முருகப்பெருமான் ஒவ்வொரு முறை ‘முருகா’ என்று அழைக்கும்போதும் அவர்களுக்கு ஆயுளை நீட்டிக்கிறான் என்பார்கள். அதுமட்டுமா முருகா என்று ஓதுவார் எல்லோரும் மும்மை நலங்களும் பெற்று உயர்வு கொள்வார்கள் என்று ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.
‘குறிஞ்சிக்கிழான்’ எனும் மலைக்கடவுளான முருகப்பெருமான் தென் தமிழகத்தின் பல்வேறு தலங்களில் எழுந்தருளி இருக்கிறான். அதில் முக்கியமான திருத்தலம் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
இன்று சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலேசியா நாட்டை சேர்ந்த உபயதாரர்கள் மூலம் உற்சவர்க்கு ஸ்கந்த ஹோமம் நடத்தப்பட்டது. யாக பூஜை முடிந்து, மேள தாளத்துடன் வலம் வந்து உற்சவர்களுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. முருகனும் தெய்வானையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.