தர்கா இடத்தில் கார்த்திகை தீபம்..! இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமையை கெடுப்பதா..? -பள்ளிவாசல் அமைப்பினர் கண்டனம்
தர்கா இடத்தில் சமூக விரோதிகள் சிலர் கார்த்திகை தீபம் ஏற்றியதாக திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் அமைப்பினர் கண்டனம்
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் உள்ளது.
இங்கு மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரம் அருகே கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
கார்த்திகை தீப கல்தூண் தொடர்பாக இரு சமூகப் பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை தொடர்வதால் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அங்கு தீபம் ஏற்ற தடை செய்யப்பட்டது.
அதற்குப் பதிலாக திருப்பரங்குன்றம் கோவில் மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் கோவில் அறநிலைத்துறை சார்பில் ஏற்றப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கல்லத்தி மரம் அருகே கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில் இந்து முன்னணி சார்பில் போலீஸாரால் தடை செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கல்லத்தி மரம் அருகே உள்ள தீபதூணில் தீபம் ஏற்றி அதனை முகநூலில் பதிவு செய்து உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா தர்கா பள்ளிவாசலில் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் தர்கா உள்ள இடத்தில் சில சமூக விரோதிகள் கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் சிக்கந்தர் தர்கா உள்ளதே இதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.
பள்ளிவாசல் அருகே தீபம் ஏற்றியதால் இரு சமூகத்தினர் இடையே பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மலைமேல் காவலில் உள்ள காவலர்கள் கண்காணிப்பு பணியில் சரியாக ஈடுபடவில்லை.
திருப்பரங்குன்றத்தில் மாமன் மச்சான்களாக உறவில் இருக்கும் இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை கெடுப்பதற்கு சில சமூக விரோதிகள் செயல்படுகின்றனர்.
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.
தீபம் ஏற்றிய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ள காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை சரி செய்ய வேண்டும் என கண்டனம் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.