மதுரையில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தானாக தீ வைத்து தற்கொலை

மதுரையில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தானாக தீ வைத்து தற்கொலை

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள பராசக்தி நகர் பகுதியில் சேர்ந்தவர் தாமோதரன் இவரது மனைவி ரூபாவதி 42 இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பையனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு 2020 ஆம் ஆண்டு தாமோதரன் மாரடைப்பால் உயர்ந்தார் இந்த சோகத்தில் இருந்த ரூபாவதி மனதளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்த ரூபாவதி நேற்று இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டின் அறையில் தானாக தீ வைத்து தற்கொலை செய்து செய்து கொண்டார்.

வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் அவனியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பெண் கருகி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் மாரடைப்பு உயிரிழந்த சோகத்தில் இருந்தால் மனைவி தானாக தீ வைத்து உயிரிழந்தும், இதனால் பள்ளி படிக்கும் இரண்டு குழந்தைகள் தாய் தந்தை இழந்து நிற்கதியாக நிற்பது அப்பகுதி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!