தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நாம் தமிழர் வேட்பாளர்!

தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் சக்திகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து, மாநாடு, வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் வெளியீடு என அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இச்சூழலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் பிரசாரத்தையும் தொடங்கினார். பின்னர் கடந்த ஒருமாதமாக வேட்பாளர்கள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கும் சீமான் இன்று காலை காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் வந்த சீமான், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறைப்படி வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

முன்னதாக, கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கடந்த 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியிலும், அதற்கு முன்னதாகக் கடலூரிலும் போட்டியிட்ட சீமான், இம்முறை தென் தமிழகத்தின் மையப்பகுதியான காரைக்குடியைத் தேர்ந்தெடுத்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வரிசையில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் முனைவர் து.சத்யாதேவி அவர்கள் தனித்துவமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

மாட்டுவண்டியில் ஏர்கலப்பை, ஆட்டுக் கிடாயுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக் கிடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பாரம்பரிய வேளாண்மை மற்றும் கிராமிய வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது மாட்டுவண்டி, ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாய் ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பிரதிபலிப்பதாகவும், அவர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நாளிலேயே இவ்வாறு தனித்துவமான முறையில் வந்த சத்யா தேவி, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!