திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்; ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடரும்… தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்; ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடரும்… தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி தங்கள் வீடு வாசல்களில் கொடி கட்டி விளக்கேற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள்; மலை அடிவாரத்தில் தரையில் அமர்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். பரபரப்பான சூழலுக்கு இடையே நேற்று முன்தினம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முதல் பக்தர்களுக்கு மலைமீது அனுமதியென காவல்துறையை அறிவித்திருந்தது. இந்த நிலையில் கார்த்திகை தீபத்தின் போது அனுமதிக்காமல் தற்போது சந்தனக்கூடு திருவிழா என்பதால் தான் அனுமதிக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெரு படப்பட்டி தெரு, கீழத்தெரு, நெல்லையப்பர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் முருகன் படம் பொறித்த கொடியை கட்டி தங்கள் வாசல்களில் விளக்குகளை ஏற்றியுள்ளனர்.

மேலும் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் மலை படிக்கட்டு அருகே தரையில் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று எழுதி விளக்குகளை ஏற்றி அதை சுற்றி தரையில் அமர்ந்து முருகன் பாடல்களை பாடி கோஷங்களை எழுப்பி அரை மணி நேரத்திற்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த முத்து செல்வி கூறுகையில்:

மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி எங்கள் வீடுகளில் கொடி கட்டி, விளக்குகளை ஏற்றியுள்ளோம். மேலும் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் விளக்கேற்றாத அரசின் மீது எதிர்ப்பு தெரிவித்த விளக்கம் கொடியும் ஏற்றியுள்ளோம். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் தீபம் ஏற்றக்கூடாது என அரசு சொல்கிறது, தற்போது சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டும் கள்ளத்தி மரத்தில் கொடியேற்ற அனுமதித்திருக்கிறீர்கள். இந்த அனுமதி தேவை இல்லையே. கார்த்திகை தீபத்தின் போது 144 தடை உத்தரவு போட்டீர்கள். பொது சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டும் சுதந்திரமாக திறந்து விட்டிருக்கிறீர்கள். இது தேவையில்லை வேண்டுமென்றால் சந்தனக்கூடு ஆறாம் தேதிக்கு பிறகு கதவை திறந்து விடலாம்.

எங்கள் மக்கள்தான் ஒன்றாக இருப்பதாக சொல்கிறார்களே தவிர அண்ணன் தம்பியாக இருப்பதாக அவர்கள் சொல்லவில்லை. நெல்லித்தோப்பு வரை தான் உரிமை உள்ளது அதுவரை தான் வரவேண்டும் அதை மீறி வரவேண்டும் என்றால் சும்மா வேண்டும் என்றால் வரலாம் தீபம் ஏற்ற வேண்டும் என்று வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அண்ணன் தம்பியாக அவர்கள் பார்த்தால் தீபம் தானே அவர்கள் ஏற்றிக் கொள்ளட்டும் என்று சொல்லி இருக்கலாமே. இதைப் பார்த்தால் ஒற்றுமையாக இருப்பது போல் தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்காக போராடி உரிமையை மீட்டெடுத்ததை போல, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு இந்த போராட்டம் தொடரும் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!