திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் ‌- ரஜினி மன்றம் ஆதரவு!

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றக்கோரி நாளை உண்ணாவிரத போராட்டம் ‌- ரஜினி மன்றம் சார்பாக ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக பேட்டி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது.

ஆனால் அரசு தரப்பில் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் சென்று இருப்பதால் அனுமதி மறுப்பு தெரிவித்து காவல்துறை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோரி நாளை 13ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த நீதிமன்றம் சென்று நிபந்தனைகளுடன் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் ஒரு பிரிவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஜினி மன்றத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ப போவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பரங்குன்றம் ரஜினி மன்றம் நகரச் செயலாளர் கோல்டன் சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்;-

நாங்கள் மதவாதிகள் அல்ல, ஆன்மீகவாதிகள் அதை தான் தலைவரும் சொல்லிக் கொடுத்துள்ளார். துர்கா ஸ்டாலின் கூட ஆன்மீகவாதி தான் அவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ரஜினி நகர் மன்றம் சார்பாக ‌ உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!