இந்தியாவின் அடுத்த பிரதமர் மு.க.ஸ்டாலின்- தேசிய அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!

தேசிய அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு.. அடுத்த பிரதமர் மு.க.ஸ்டாலின்..

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து கூறுவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் பிரதமரானால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய பரூக் அப்துல்லா, தமிழக முதல்வரை தேசிய அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களிலும், 2006 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்றது. “பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். யார் தலைமை ஏற்பார்கள், யார் பிரதமர் என்று நான் கூறவில்லை. அது கேள்வியல்ல, ஒற்றுமையாகப் போராட விரும்புகிறோம். இதுவே எங்கள் விருப்பம்’- என்று கார்கே தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!