
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 20 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறிப்பாக அரசியல் கட்சிகளிடையே 4 முனை போட்டி ஏற்பட்டது. இதில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது வெளியாகி வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வந்தார்.இதையடுத்து ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இளங்கோவன் 53548 வாக்குகளையும் அிதமுக 19936 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி 3830 வாக்குகளையும் தேமுதிக560 வாக்குகளையும் பெற்று வருகிறது.
இந்த தேர்தலில் வாக்காளர்களை அடைத்து வைத்து பணம், கைக்கடிகாரம் போன்ற பரிசு பொருள்கள், கறி சோறு போடப்பட்டதாக அரசியல் கட்சிகள் மீது புகார்கள் மாறி மாறி தேர்தல் ஆணையத்திற்கு சென்றடைந்தன.இந்த நிலையில் நாம் தமிழர் – திமுக இடையே அடிதடி தகராறுகள் நடந்து வழக்குகள் எல்லாம் பதிவாகின. பொதுவாக தேர்தல்களில் ஒரு 4 கட்சி போட்டியிடுகிறது என்றால் அதில் இரு கட்சிகள் அதிக வாக்குகளையும் மீதமுள்ள இரு கட்சிகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கும். அது போல் இந்த தேர்தலில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும் அதிமுக இரண்டாவது இடத்திலும் உள்ளது.இதில் 3 ஆவது, 4 ஆவது இடம் யாருக்கு என்பதுதான் கேள்வி. அதில் தேமுதிக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. மேலும் சுயேச்சை வேட்பாளர் முத்து பாபாவை விட தேமுதிக வேட்பாளர் ஆனந்த் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்.

இது தேமுதிக தொண்டர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கி 2006 இல் நடந்த முதல் சட்டசபை தேர்தலிலேயே விஜயகாந்த் எம்எல்ஏவானார்.
மனவேதனையில் தேமுதிக தொண்டர்கள்: 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 22 இடங்களில் தேமுதிக வென்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தில் விஜயகாந்த் அமர்ந்தார். அப்படிப்பட்ட தேமுதிக அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணியை சரிவர தேர்வு செய்யாததால் சறுக்கியது.கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். அதிமுக, அமமுகவுடன் கூட்டணி அமைத்தும் தேமுதிக புத்துணர்வு பெறவில்லை. கழுதை தேய கட்டெறும்பான கதையாக மேலும் மேலும் பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தை கூட தேமுதிகவால் பெற இயலவில்லை. இதை எண்ணி விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனர்.

உறுதியோடு நிற்கும் நாம் தமிழர்: ஆனால் நாம் தமிழர் கட்சி 2010 ஆம்ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 சட்டசபை தேர்தலிலம் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதையடுத்து 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட தொடங்கியது. இன்னும் ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாவிட்டாலும் தனது கொள்கையில் சீமான் உறுதியாக உள்ளதால் அவருக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகுகிறது.
உறுதித்தன்மையை இழந்த தேமுதிக:
ஆனால் தேமுதிக ஒவ்வொரு முறையும் தனது கொள்கையை மாற்றிக் கொண்டு உறுதித்தன்மையில்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகிறது. இது அந்த கட்சியினருக்கே பிடிக்கவில்லை. 2014, 2016 நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலின் போதே தொண்டர்கள் தனித்து போட்டியிடலாம் என்றனர். ஆனால் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டார். இதுவே தேமுதிக கரைய காரணமாக இருக்கும் என கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு மேலும் கட்சியின் நிலை குறித்து சுய பரிசோதனை செய்யாவிட்டால் இனி அடுத்தடுத்த தேர்தல்களிலும் தேமுதிகவுக்கு படுதோல்வி கிடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்கள் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.