
திமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு!
திமுக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு.

திராவிட முன்னேற்ற கழக மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் R.பாலாஜி அவர்கள் 29.5.2024 அன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னதாக நேற்று திங்கட்கிழமை மாலை அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் முருகனும் தெய்வானையும் எழுந்தருளி, தீபாராதனை நடைபெற்றுது.

பின்னர் திமுகவினர் சார்பில் மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் R.பாலாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி, 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரை இழுத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.