மதுரை சித்திரை திருவிழா: பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகளின் பாவக்காய் மண்டபத்தில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருளினர்.

பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகள்… பாவக்காய் மண்டபத்தில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருளினர்.

மீனாட்சி கோயிலுக்கு பலரும் பலவித சேவைகளை செய்து வருகின்றனர். அதிலும் மன்னர் காலங்களில் மீனாட்சி கோயிலுக்குத் தொண்டு செய்தலை பிறப்பின் நோக்கமாகவே கருதியவர்கள் ஏராளம். அப்படியான இருவர் அழகப்ப பிள்ளை, தானப்ப பிள்ளை..இவர்கள் மீனாட்சி கோயிலுக்கு செய்த கைங்கர்யங்கள் கண்டு வியந்த பாண்டிய சேனாதிபதி, அவர்களது வேண்டுகோள் கேட்டார். தங்கள் ஊருக்கு அம்மையும் அப்பனும் ஒருநாள் வந்து தங்கி அருளவேண்டும் என அவர்கள் பதிலுரைத்தனர். அன்றுமுதல் இந்த நான்காம் நாள் மண்டகப்படி. கைங்கர்யம் செய்து வரம்கேட்ட இருவரின் ஊர், வில்வபுரம். வில்வமரங்கள் நிறைந்த ஊர் என்பதால் வில்வபுரம் எனப் பெயர் என்பர்.

தற்போது வில்லாபுரம் என வழங்குகின்றனர். மக்கள் பாவங்களை காய்த்து போக்கச் செய்வதால் மண்டபத்துக்குப் பெயர் பாவக்காய் மண்டபம். பாவக்காய்கள் நிவேதனமாக இறைவனுக்கு மக்கள் அளித்து வந்ததால் இந்தப் பெயரானது என்றும் கூறுகின்றனர்.

மதுரை தெற்குவாசலை அடுத்த வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படிக்கு இறைவனும் இறைவியும் பல்லக்கில் காலையில் வந்து தங்குவர்.மீண்டும் மாலை புறப்பட்டு இரவு கோயிலை அடைவர். அன்றைய தினம் மாசிவீதி சுற்றுவதில்லை. சின்னக்கடைத்தெரு வழியாகவே சென்று வருவர். வில்லாபுரம் சுவாமி மண்டகப்படி முழுக்க சுற்றுவட்டார பக்தர்கள் வந்து கூடிநின்று தரிசித்த வண்ணம் இருப்பர் அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக இன்றுவில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருளினார்.

பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகளாக விளங்கிய தானப்ப பிள்ளை- அழகப்பபிள்ளை குடும்பத்தை கெளரவப்படுத்தும் விதமாக மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பரிகார மூர்த்திகளுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மாசி வீதியில் வந்து தெற்கு வாசல் வழியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளுளினர். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை பூஜைகளுக்கு பின் மீண்டும் மாசி வீதிகள் வழியாக சாமி ஊர்வலமாக அம்மன் சன்னதி சென்றடைந்தனர்.


செய்தியாளர்- வி.காளமேகம், மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!